லோரி – விரைவு பேருந்து விபத்து; 14 பேர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்

பத்து பஹாட், பாகோ-யோங் பெங் பிளஸ் நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 105 இல் இன்று, ஒரு விரைவு பேருந்து ஓட்டுநர் மற்றும் 14 பயணிகள் அவர்கள் பயணித்த வாகனம் லோரியுடன் மோதிய விபத்தில் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அதிகாலை 2.45 மணியளவில் பதிவாகியதாக பத்து பஹாட் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார். விரைவு பேருந்தை 14 பயணிகளுடன் 24 வயது இளைஞன் ஓட்டிச் சென்றார். லோரி மளிகைப் பொருட்களை ஏற்றிச் சென்ற 40 வயது மதிக்கத்தக்க ஒருவன் ஓட்டி வந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் பாகோவில் இருந்து யோங் பெங் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் பஸ் லோரியின் பின்புறம் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இஸ்மாயில் கூறுகையில் விதிமீறலின் விளைவாக, இரண்டு வாகனங்களும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here