வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இந்திய குழந்தைகளுக்கான பாலர்பள்ளி கல்வி மானியமாக RM13.07 மில்லியன் ஒதுக்கீடு- மித்ரா

புத்ராஜெயா, ஜூலை 6 :

வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள (பி40) குழுவைச் சேர்ந்த நான்கு முதல் ஆறு வயதுடைய 5,164 இந்தியக் குழந்தைகளுக்கு பாலர் கல்வியை வழங்குவதற்காக, மலேசிய இந்திய சமூக மாற்றப் பிரிவு (மித்ரா) மூலம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகம் சுமார் RM13.07 மில்லியன் மானியத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

இன்று அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த மானியம் இந்த ஆண்டு மார்ச் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலான 2022/2023 பள்ளி அமர்வுக்கான கல்விக் கட்டணங்களை உள்ளடக்கியதாக அமைச்சகம் கூறியது; இதில் புத்தகங்கள் மற்றும் பணித்தாள்களை வழங்குதல்; சீருடைகள் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்டார்டர் கிட்; அத்துடன் B40 குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கான மானியங்கள் என்பவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

கெடா, பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள 214 பாலர் பள்ளிகளை உள்ளடக்கிய ஐந்து தன்னார்வ நிறுவனங்கள் மூலம் இந்த மானியம் வழங்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சாதிக் கூறுகையில், B40 இந்தியக் குழந்தைகளும் அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டிற்குள் நுழைவதற்கான ஆயத்தமாக பாலர் பள்ளிகளில் சேருவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதே இந்த உதவியின் நோக்கம் என்றார்.

“இந்த முன்முயற்சியானது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்வதில், பெற்றோரின் நிதிச் சுமையை சிறிது குறைக்கும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here