இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் மரணம், நால்வர் படுகாயம்

போர்ட் கிள்ளான், ஜூலை 8 :

தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு எக்ஸ்பிரஸ்வே (SKVE) – கேரி தீவில் நேற்று இரவு இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

நேற்றிரவு 10.42 மணிக்கு அவர்களுக்கு சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாகவும், எட்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த இடத்திற்கு தமது உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு இயக்குநர் நோராஸாம் காமிஸ் தெரிவித்தார்.

“இடத்திற்கு வந்ததும், தீயணைப்பு வீரர்கள் ஒரு பல்நோக்கு வாகனம் (எம்பிவி) சம்பந்தப்பட்ட ஒரு விபத்தை கண்டுபிடித்தனர், அதாவது ஆறு வெளிநாட்டவர்கள் பயணஞ் செய்த தோயோத்தா அன்சர் மற்றும் உள்ளூர் ஆடவர் ஓட்டிவந்த ஹோண்டா சிஆர்வி ஆகியவை மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.

“தீயணைப்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணியை மேற்கொண்டனர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரையும் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களில் இருந்து வெளியே அகற்றினர்.

அவர்களில் மூன்று வெளிநாட்டவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அத்தோடு ஒரு உள்ளூர்காரரும் மூன்று வெளிநாட்டவர்கழும் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று நோராஸாம் கூறினார்.

“பாதிக்கப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here