பியூஃபோர்ட்டில் 18 மாத குழந்தை காணாமல் போனதாக நம்பப்படுகிறது; தேடுதல் பணி தீவிரம்

கோத்தா கினாபாலு, ஜூலை 9 :

இன்று (ஜூலை 9) பியூஃபோர்ட்டில் காணாமல் போனதாக நம்பப்படும் குழந்தை, வீட்டின் அருகிலுள்ள ஆற்றில் விழுந்து, மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பத்து 66, ப்யூஃபோர்ட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு, காலை 11.19 மணியளவில் குழந்தை காணாமல் போனது குறித்து எச்சரிக்கை அழைப்பு வந்தது.

பாதிக்கப்பட்டவரின் தந்தையின் கூற்றுப்படி, அவரும் அவரது மனைவியும் பியூஃபோர்ட்டில் உள்ள தாமு (வாரச் சந்தை) ஒன்றில் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் குழந்தை உறவினர்களின் பராமரிப்பில் இருந்தார் என்றார்.

காலை 8.30 மணியளவில் வீட்டின் கதவு திறந்து கிடந்ததையும், சிறுமியைக் காணவில்லை என்பதையும் குழந்தையின் பாட்டி கவனித்ததாக, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காணாமல்போன குழந்தை கடைசியாக கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கொண்ட வெள்ளை சட்டை மற்றும் அடர் நீல நிற பேன்ட் அணிந்திருந்தார் என்று அறியமுடிகிறது.

” ப்யூஃபோர்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு படை, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் கிராமவாசிகள் அடங்கிய மூன்று குழுக்களுடன் இன்று நண்பகல் 12.30 மணியளவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கியது.

“இந்த நடவடிக்கை ஆற்றின் குறுக்கே மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாட்டுச் சாவடியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் மேற்கொள்ளப்பட்டது” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here