கோலாலம்பூர், ஜூலை 10 :
மாட்சிமை தங்கிய பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவரின் துணைவி பேரரசி, துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் தங்கள் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அல்லாஹ் (SWT) வினால் ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த தியாக திருநாள் சடங்குகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் மாண்புமிகு பேரரசர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
நேற்று, இஸ்தானா நெகாரா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய ஒரு பதிவில், இந்த வாழ்த்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர்.
நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ஹஜ்ஜுப்பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.