சபாவில் பெய்த புயலுடன்கூடிய கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில் 40 மரங்கள் விழுந்தன

கோத்தா கினாபாலு, ஜூலை 10 :

புயலுடன் கூடிய கனமழையால் மாநிலத்தில் குறைந்தது 40 மரங்கள் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சபா மாநில செயல்பாட்டுப் பிரிவின் துணை இயக்குநர் மிஸ்ரான் பிசாரா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களிளாக கோத்தா கினாபாலு, பெனாம்பாங், துவாரான், கூடாட், சிபிதாங், தேனோம், கிமானிஸ், பாப்பார், பியூஃபோர்ட் மற்றும் கோலா பென்யூ ஆகியவை அடங்கும்.

இதில் கோலா பென்யூ மாவட்டத்தில் மட்டும் 10 மரங்கள் விழுந்ததில், அங்கு அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து பெனாம்பாங் மாவட்டத்தில் 8 வழக்குகளும், கோத்தா கினாபாலு 5 வழக்குகளும் உள்ளதாக அவர் கூறினார்.

“இதற்கிடையில், துவாரானில் 4 மரங்கள் விழுந்த வழக்குகள் பதிவாகின, அத்தோடு சிபிதாங், கூனாக், கூடாட், கிமானிஸ் மற்றும் பாப்பார் மாவட்டங்களில் தலா இரண்டு வழக்குகளும் பியூஃபோர்ட் மாவட்டத்தைப் பொறுத்தவரை, அங்கு ஒரு வழக்கு மட்டும் பதிவாகியது ,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்த வழக்குகளில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் வாகனங்கள் மீது மரங்கள் விழுந்த சம்பவங்கள் பல உள்ளன என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here