சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, மலேசியாவிற்கு அதிகாரப் பூர்வ விஜயம்

புத்ராஜெயா, ஜூலை 11 :

சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீக் இன்று (ஜூலை 11) முதல் இரண்டு நாட்கள் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா அவரை வரவேற்பார் என்று வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா), இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது, ​​வாங் யி இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுடன் சந்திப்பை மேற்கொள்வர்.

அத்தோடு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோபையும் மரியாதை நிமிர்த்தம் சந்திக்கிறார்.

இந்நிலையில் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைபுதீன் மற்றும் வாங் யி ஆகியோருக்கிடையில் இருதரப்பு கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், இதில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்; மேலும் உயர் தொழில்நுட்பம்; டிஜிட்டல் பொருளாதாரம்; கோவிட்-19 தடுப்பூசி ஒத்துழைப்பு; மற்றும் தொற்றுநோய்க்கு பிந்தைய மீட்பு. என்பனவும் உள்ளடங்கும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

“இரு வெளியுறவு அமைச்சர்களும் பொதுவான நலன்களின் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரு நாடுகளின் கூட்டாண்மையின் 10-ஆவது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு கொண்டாடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 முதல், சீனா மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது, வர்த்தகம் RM421.07பில் (US$101.55பில்) மொத்த வர்த்தகத்தில் 18.9% ஆக உள்ளது, இது 2020ல் இருந்து 27% அதிகமாகும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here