அலோர் காஜா, ஜூலை 11 :
இன்று திங்கள்கிழமை (ஜூலை 11) மஸ்ஜிட் தனா நாடாளுமன்ற சேவை மையத்தில் நடத்தப்பட்ட ஹஜ்ஜுப்பெருநாளுடன் இணைந்த இறைச்சி (பலியிடப்பட்ட இறைச்சி நன்கொடை) விநியோகத்தின் போது, அதனைப் பெறுவதற்கு வந்த 55 வயதுடைய ஒருவர் மரணமடைந்த சம்பவம் அங்குள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அர்ஷாட் அபு இதுபற்றிக் கூறுகையில், உயிரிழந்தவர் 55 வயதான அப்துல் மாலிக் பாகார் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவரை காலை 11 மணியளவில் தனது பங்கினை சேகரிக்க வருமாறு ஏற்பாட்டாளர் அவரது பெயரை அழைத்தபோது, அவர் பதிலளிக்கத் தவறிவிட்டார்.
உடனே “ஒழுங்கமைப்பாளரின் பிரதிநிதி ஒருவர் அந்த நபர் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, அவர் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டார். உடனடியாக ஒரு சிலர் அந்த நபரை சோபாவிற்கு தூக்கிச் சென்றனர், பின்னர் கோலா சுங்கை பாரு மருத்துவ மனைக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது என்றார்.
அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வந்ததாகவும், அந்த நபர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் அர்ஷாட் கூறினார்.
இதையடுத்து, விழா அமைப்பாளர் போலீசில் புகார் அளித்தார் என்றார்.
பிரேத பரிசோதனையின் முடிவுகள் நிலுவையில் உள்ளதால், இந்த விஷயம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.