ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் வார இறுதிக்குப் பிறகு மக்கள் நகரத்திற்கு திரும்புவதால், பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

கோலாலம்பூர், ஜூலை 11 :

ஹரி ராயா ஹஜ்ஜு அடிலதா வார இறுதிக்குப் பிறகு, மக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து நகரத்திற்குத் திரும்புவதால், இன்று மாலை (ஜூலை 11) கோலாலம்பூருக்குச் செல்லும் பல நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) டூவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாலை 4.45 மணி நிலவரப்படி, காராக் முதல் லெந்தாங் வரையிலான சந்திப்பில் 25 கிமீ மற்றும் பத்து 12 முதல் கோம்பாக் டோல் பிளாசா வரை 8.8 கிமீ வரை அதிக அளவு மற்றும் மெதுவாக நகரும் போக்குவரத்தைக் காண முடிந்ததாக குறிப்பிட்டிருந்தது.

மேலும் பெடாஸ் லிங்கியிலிருந்து போர்ட்டிக்சனுக்கான சந்திப்பு வரை போக்குவரத்து மெதுவாக நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது; அத்தோடு சிம்பாங் அம்பாட் முதல் பெடாஸ் லிங்கி வரை; ஆயிர் கேரோ பிரிட்ஜ் உணவகம் முதல் சிம்பாங் அம்பாட் வரை; அதே போல் பகோ முதல் புக்கிட் கம்பீர் ஓய்வு மற்றும் சேவை பகுதி (R&R) வரையும் வாகனங்கள் மெதுவாக நகருகின்றன.

மெனோரா சுரங்கப்பாதை தெற்கு நோக்கியும், பெர்மாடாங் பாவ் முதல் பிறை வரை மற்றும் கோல கங்சார் முதல் சுங்கை பேராக் ஆர்&ஆர் வரை 1.8 கிமீ வரை போக்குவரத்து மெதுவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LLM, குறிப்பாக கிழக்குப் பகுதியில் உள்ள சாலைப் பயனாளிகள் வடக்கு-தெற்கு விரைவுச் சாலை பயண நேர அட்டவணையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here