சபாவில் ஜூலை 9ஆம் தேதி முதல் நான்கு குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்

கோத்த கினாபாலு, சபாவில் மற்றொரு குழந்தை, இந்த முறை எட்டு வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். இன்னும் பெயர் கண்டறியப்படாத சிறுவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சபாவின் கிழக்குக் கடற்கரையான கினாபதங்கன் மாவட்டத்தில் உள்ள கம்போங் பத்து புட்டியில் ஆற்றில் நீராடச் சென்றபோது அவர் காணாமல் போனார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) காலை 10.05 மணியளவில் தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு விடுக்கப்பட்டு உடனடியாக ஒரு குழுவை அனுப்பியதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் மிஸ்ரன் பிசாரா தெரிவித்தார்.

சிறுவனைப் பார்த்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். ஜூன் 9 முதல் காணாமல் போன நான்காவது  சிறுவன் இவன் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சனிக்கிழமை (ஜூலை 9) மாலை 5.45 மணியளவில் மூன்று வயது முகமட் கியிஸ் அசார் அப்துல் ஹலிம் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது, மறுநாள் காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) தவாவில் காணாமல் போன ஏழு வயது மாற்றுத்திறனாளி சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்ட பின்னர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டான்.

எவ்வாறாயினும், சனிக்கிழமை (ஜூலை 9) பியூஃபோர்ட்டில் உள்ள கம்போங் சாலிவாங்கன் பாரு வீட்டில் இருந்து காணாமல் போன ஜூட் ஏஞ்சல் ஜெர்மியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  காணாமல் போன 18 மாத சிறுமியை தேடும் பணியை மீட்பு குழுவினர் விரிவுபடுத்தியுள்ளனர். இவர் சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து காணாமல் போனார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here