கட்சி தாவலை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளது என்கிறார் அஸலினா

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 13 :

கட்சி தாவலை தடுக்கும் மசோதா தயாராக உள்ளது என்றும் அது விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் முன்னிலையில் இதுதொடர்பான இறுதிக் கூட்டம் முடிவடைந்ததாகவும், கட்சி தாவலை தடுக்கும் மசோதா தொடர்பான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவின் (PSSC) உறுப்பினரும் பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்,

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) அஸலினா பதிவிட்ட ஒரு டுவீட்டில், “கட்சி தாவலை தடுக்கும் சட்டத்திற்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழு கூட்டம் முடிவடைந்துள்ளது, மசோதாவை அவையில் சமர்ப்பிக்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

ஜூலை 18 ஆம் தேதி நாடாளுமன்றம் அதன் திட்டமிடப்பட்ட கூட்டத்தை தொடங்கும் போது மசோதா தாக்கல் செய்யப்படும் என்று வான் ஜுனைடி கூறினார்.

இதன் வரைபு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் அது வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர் மேலதிக விவாதத்திற்காக தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது.

கட்சி தாவல் எதிர்ப்புச் சட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் வரையறைகளை ஆராயும் பணியைத் தெரிவுக்குழு மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here