காவடி தொடர்பான கருத்துகள்; முகமட் ஹசானிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்வர்

அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானிடம் காவடிகள் குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறிய கருத்துகள் குறித்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தோக் மாட் என்று அழைக்கப்படும் முகமட் அவர்களுக்கு எதிராக போலீஸ் புகாரை பதிவு செய்த பின்னர், புலனாய்வாளர்கள் ஒரு வழக்கு பதிவினை திறந்தனர் என்று செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பெ எங் லாய் போர்ட்டலுக்கு உறுதிப்படுத்தினார்.

நேற்று, ஆசியா டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், 14ஆவது பொதுத் தேர்தலில் (GE14) அம்னோவின் தோல்வியை விவரிக்கும் போது, காவடியை “சுமை” என்று குறிப்பிட்டு, இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு முகமதுவிடம் பெர்சத்து தலைவர் ஒருவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here