வைரல் வீடியோக்கள் தொடர்பாக நகைச்சுவை நடிகர் ரிசல் வான் கெய்சல் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்

இன மற்றும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் கூறப்படும் மூன்று வீடியோக்கள் மீதான விசாரணையை எளிதாக்கும் வகையில் நகைச்சுவை நடிகர் ரிசல் வான் கெய்சல் (Rizal van Geyzel) மீண்டும் காவலில் வைக்கப்படுவார்.

கிராக்ஹவுஸ் காமெடி கிளப் இணை நிறுவனரான ரிசல், டாங் வாங்கி லாக்கப்பில் ஒரு இரவைக் கழிப்பார் என்று இந்த விஷயத்திற்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

வீடியோக்களில் அவர் அணிந்திருந்த ஆடைகளை அடையாளமாக  பெறுவதற்காக ரிசாலை அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்துச் செல்வதாக எப்ஃஎம்டிக்கு தெரிய வந்துள்ளது. தடுப்புக்காவல்  உத்தரவுக்காக ரிசால் நாளை காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், புக்கிட் அமானின் D5 வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நான்கு பிள்ளைகளின் தந்தை விசாரிக்கப்படுகிறார் என்பதை மற்றொரு போலீஸ்ஆதாரம் உறுதிப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here