8 வாகனங்கள், 21 சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் பலி; பலர் காயம்

பாசீர் பூத்தே, ஜாலான் கமுண்டிங்கில் இன்று நடந்த விபத்தில் ஒரு பெண் இறந்தார், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். காலை 9.05 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (SUV), இரண்டு லோரிகள், மூன்று கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 21 மிதிவண்டிகள் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரும்பு கம்பி ஏற்றி வந்த லோரி ஒன்று கவிழ்ந்து மற்றொரு வாகனம் மீது மோதியது. விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். ஒரு குழந்தை மோசமாகவும் மற்றும் மூன்று பேர் லேசான காயம் அடைந்தனர். மேலும் ஐந்து பேர் பாதிக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here