பிரதமர் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை அறிவிக்கலாம் என்று அம்னோ உறுப்பினர்கள் கூறுவது பொறுப்பற்ற பேச்சு என்கிறார் நஸ்ரி

பக்காத்தான் ஹராப்பான் (PH) உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜூலை 31ஆம் தேதி முடித்துக் கொள்ள கட்சி தயங்கக் கூடாது என்று கூறிய அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷஹரில் ஹம்டானை அம்னோ மூத்த தலைவர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் சாடினார் என்று மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டணி உறுப்பினர்களில் எவரேனும் வெளியேறினால், பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் தொடரும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவது முக்கியம். அதனால்தான் எம்மால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அப்படியே மாற்ற முடியாது. ஏனென்றால் எங்களுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது.

மக்கள் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இப்போது பிரதமர் எப்போது வேண்டுமானாலும் தேர்தலுக்கு அழைக்கலாம் என்று தகவல் பிரிவுத் தலைவர் பேசுவது பொறுப்பற்றது என்று அவர் மலாய் மெயிலிடம் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தைத் தொடராமல் இருக்க அம்னோவிற்குள் எதிரிகள் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று கட்சிக்குள் இருக்கும் விமர்சகர்களை ஷாரில் சாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஏற்கனவே அதன் உச்ச மன்றத்தால் எடுக்கப்பட்டது என்றும் அது கட்சிக்கு நன்மை பயக்கும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here