பேராக்கில் இரு ஆண்டுகளில் குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 700 வழக்குகள் பதிவு

ஈப்போ, ஜூலை 20 :

பேராக்கில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 689 உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக பேராக் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், டத்தோ டாக்டர் வான் நோராஷிகின் வான் நூர்டின் தெரிவித்தார்.

பேராக் மாநில சட்டமன்றத்தில் போக்கோக் அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினர் லியோவ் தை யீயின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு சமூக நலத் துறைக்கு (JKM) 342 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2021 இல் 347 வழக்குகள் பதிவாகின என்றார்.

அதேநேரத்தில் “2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் போலீசில் பதிவாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 52 ஆகும். இதில் “2020 இல் மொத்தம் 29 வழக்குகள் மற்றும் 2021 இல் 23 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று  கூறினார்.

மேலும் விவாகரத்து மற்றும் குடும்ப சண்டைகள் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் காரணிகளில் ஒன்றாக இருப்பதாக டாக்டர் வான் நோராஷிகின் குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here