முகத்தை பார்க்காது சலாம் கொடுத்ததால், கடற்படை வீரரின் மண்டையில் அறைந்த சக தொழுகையாளர்

மஞ்சாங், ஜூலை 20 :

லூமூட் உள்ள, கடற்படைத் தளத்திற்கு சொந்தமான மஸ்ஜிட் அன்னூரில், தொழுகையின் பின்னர் சலாம் கொடுக்கும்போது முகத்தைப் பார்க்காததால், கோபமடைந்த சக தொழுகையாளர், கடற்படை வீரர் ஒருவரை மண்டையில் அறையும் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டது.

மஞ்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நோர் ஓமர் சாஃபி கூறுகையில், இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகாரளித்ததாக அவர் கூறினார்.

அவரது கருத்துப்படி, நேற்று மாலை 5.10 மணியளவில் அஸர் தொழுகைக்குப் பிறகு மசூதியில் கடற்படை உறுப்பினரான பாதிக்கப்பட்டவருக்கும், அவரை தாக்கியதாக்க கூறப்படும் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கும் இடையே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

“தொழுகைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் அடையாளம் தெரியாத சந்தேக நபருக்கு சலாம் கொடுத்தார். சந்தேக நபர் திடீரென பாதிக்கப்பட்டவரின் தலையின் பின்புறத்தில் பலமாக அறைந்தார், இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவருக்கு தலையின் பின்புறம் மற்றும் காதுகளில் வலி ஏற்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சலாம் கொடுக்கும்போது, சந்தேக நபரின் முகத்தைப் பார்க்காததால் இந்த சம்பவம் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஓமர் கூறினார்.

“அந்தச்செயல் 46 வயதான TLDM ஓய்வு பெற்ற சந்தேக நபரை கோபப்படுத்தியது என்று கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 112வது பிரிவின்படி வாக்குமூலம் பதிவு செய்ய இரு தரப்பினரும் மஞ்சாங் காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர், இந்த விசாரணையைத் தொடர விரும்பவில்லை என்றும் தான் ஏற்கனவே செய்த போலீஸ் அறிக்கையை திரும்பப் பெற்றுள்ளார் என்றும் இந்த வழக்கு தொடர்பில் மேலும் நடவடிக்கை இல்லை (NFA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here