லங்காவியில் குடிபோதையில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட ஆடவரை போலீஸ் தேடுகிறது

லங்காவி, ஜூலை 21 :

குடிபோதையில் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட உள்நாட்டு சுற்றுலாப் பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.

லங்காவி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி கூறுகையில், உள்ளூர் சுற்றுலாப்பயணியான ஒருவர் ஓடும் பல்நோக்கு வாகனத்தின் கூரையில் அமர்ந்து, மதுபானங்களை குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் பரவியது என்றார்.

குடிபோதையில் பொது இடங்களில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதற்காக, சிறு குற்றச் சட்டம் 1955 (திருத்தப்பட்ட 1987) பிரிவு 21ன் கீழ் காவல் துறை புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்” என்று அவர் வியாழக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த நபரும் அவரது நண்பர்களும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் அவர்கள் தீவை விட்டு வெளியேறியதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று ACP ஷரிமான் கூறினார்.

எம்பிவி வாகனத்தின் கூரையில் இருந்து மது அருந்திய ஆடவர் தொடர்பில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது, இதனை பலர் அந்த நபது செயல் பொறுப்பற்றது என்று சாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here