புத்ரா ஜெயாவில் ஆகஸ்ட் 1 முதல் கோழி இறைச்சியின் விலை ‘சந்தை விலையை விட குறைவாக’ இருக்கும்

புத்ரா ஜெயாவில் ஆகஸ்ட் 1 முதல், இங்கு கோழியின் விலை ஒரு கிலோ ரிங்கிட் 8.50 ஆக நிர்ணயிக்கப்படும். இது சந்தையை விட  மிகவும் மலிவானது என்று டத்தோஸ்ரீ ஷாஹிடன் காசிம் தெரிவித்தார்.

Royal Floria  புத்ராஜெயா 2022 க்கான  வெளியீட்டு விழாவில் ஊடகங்களுக்குப் பேசும் போது கூட்டரசு பிரதேச அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கோழிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையை தொடர்ந்து பராமரிக்க முயற்சிக்கும் வகையில், புத்ராஜெயாவின் பிரசெண்ட்  20  இறைச்சி கூடம் கட்டப்படும் என்றார்.

வாடகை போன்ற பிரச்சனைகள் வணிக உரிமையாளர்களுக்கு இருந்தால் நாங்கள் வாடகையை குறைப்போம். மேலும் ஒரு இறைச்சி கூடம் மிகவும் தொலைவில் இருந்தால், அவர்கள் கோழிகளை புத்ராஜெயாவிற்கு கொண்டு வந்து இங்கே வெட்டலாம்.

நடவடிக்கைகளை நடத்துவதற்கு எங்களிடம் ஏற்கனவே வசதிகள் மற்றும் கிடங்குகள் உள்ளன ஆனால் அது இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்று ஷாஹிதான் கூறினார்.

விற்கப்படும் கோழிகள் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள சந்தைகளில் இருக்கும். மற்ற ஆர்கானிக் உணவுகளுடன் விற்கப்படும்.

பணவீக்கம் குறித்து ஷாஹிடான் கூறுகையில், ஒவ்வொரு நாடும் பணவீக்கத்தால் அழுத்தத்தில் இருந்தாலும் மலேசியா பணவீக்கத்தை, குறிப்பாக உணவுப் பணவீக்கத்தை குறைந்த விகிதத்தில் பராமரித்து வருகிறது. கோழிக்கறிக்கான உச்சவரம்பு விலை கிலோ ஒன்றுக்கு ரிங்கிட் 9.40 என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here