கோலாலம்பூர், ஜூலை 23 :
நாட்டில் ஜூலை 25-ம் தேதி வரை பல்வேறு திசைகளில் இருந்து காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் நண்பகல் முதல் மாலை வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இதனால் தீபகற்பத்தின் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரையில் உள்ள மாநிலங்கள், சரவாக் மற்றும் மேற்கு சபா ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்றும், மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எப்போதும் சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு www.met.gov.my என்ற இணையதளத்தையும், அதன் அனைத்து சமூக ஊடகங்களையும் பார்க்கவும், myCuaca அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்யவும் அது மேலும் அறிவுறுத்துகிறது.