கோலாலம்பூர், ஜூலை 23 :
சுகாதார அமைச்சகத்தின் CovidNow இணையதளத்தின் இன்று நண்பகல் 12.41 மணி நிலவரப்படி, நாட்டிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 2,579,865 தனி நபர்கள் அல்லது 70.7 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவையும் 130,701 தனி நபர்கள் அல்லது 3.6 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 3,397,392 பேர் அல்லது 93.1 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 3,418,426 பேர் அல்லது 93.7 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், 18 முதல் 60 வயதுடைய பெரியவர்கள் மொத்தம் 16,126,835 தனி நபர்கள் அல்லது 68.5 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவையும் 268,562 தனி நபர்கள் அல்லது 1.1 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் இரண்டாவது அளவையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 23,050,122 பேர் அல்லது 98.0 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக போட்டுள்ளனர், அதே நேரத்தில் 23,322,968 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், 12 முதல் 17 வயதுடைய இளம் பருவத்தினர், மொத்தம் 45,290 தனி நபர்கள் அல்லது 1.5 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியின் முதல் அளவை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே வகுப்பினரின் மொத்தம் 2,888,998 நபர்கள் அல்லது 92.9 விழுக்காட்டினர் தங்கள் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 2,967,678 நபர்கள் அல்லது 95.4 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
நாட்டின் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் மொத்தம் 1,468,088 சிறுவர்கள் அல்லது 41.3 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 1,766,881 சிறுவர்கள் அல்லது 49.8 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
நேற்று 22,227 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டது. அதில் முதல் டோஸாக 641 தடுப்பூசிகளும், இரண்டாவது டோஸாக 8,807 தடுப்பூசிகளும், 1,446 பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டன. இது தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICK) கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 71,695,526 ஆகக் கொண்டுவந்துள்ளது.