‘Turun Malaysia’ போராட்டக்காரர்கள் டத்தாரானுக்கு அணிவகுத்துச் செல்வதை போலீசார் தடுத்து நிறுத்தினர்

“Turun Malaysia” போராட்டக்காரர்கள் டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானுக்கு அருகே காவல் துறையினர் மனித தடுப்புகளை அமைத்தனர். வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக சுமார் 500 பேர் சோகோ வணிக வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் திரண்டிருந்தனர்.

துரைசாமி மற்றும் பிற போராட்டக்காரர்கள் தங்கள் அணிவகுப்பைத் தொடர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் வெற்றிபெறவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் “Hidup Rakyat” என்று கோஷமிட்டனர் மற்றும் பொருட்களின் விலை உயர்வு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் ஊதியக் குறைப்பைக் கோரினர்.

வியாழன் அன்று, “Turun Malaysia” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியதுடன், மாணவர்கள் மற்றும் பிற இளைஞர்கள் ஷாப்பிங் வளாகத்தில் ஒன்று கூடி, பொருட்களின் விலை உயர்வு குறித்து தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும்படிஅழைப்பு விடுத்தது. ஆர்ப்பாட்டத்தில் மலேசியர்கள் கலந்துகொள்வது குறித்து ஏற்பாட்டாளர்களால் தங்களுக்கு தெரிவிக்காததால் இது சட்டவிரோதமானது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here