கோலாலம்பூர், ஜூலை 24 :
சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா குமார், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவிலிருந்து (பெர்சாத்து) விலகவில்லை மாறாக அவர் பெர்சாத்துவின் இணைப் பிரிவின் தலைவர் பதவியை மட்டுமே துறக்க எண்ணினார் என்று பெர்சத்து கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.
“நான் இப்போதுதான் சந்தாராவிடம் பேசினேன். கட்சியின் இணை பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மட்டுமே அவர் விரும்புவதாக அவர் விளக்கினார்.
“அவர் அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் இதுதான். கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அல்ல, ”என்று அவர் ஃப்ரீ மலேசியா டுடே என்ற செய்தி இணையதளத்திடம் தெரிவித்ததாக அது தெரிவித்துள்ளது.
சாந்தாரா விலகினால் கட்சி பலவீனமடையாது, ஏனெனில் கட்சியின் எதிர்காலம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது என்று, நேற்று பெர்சத்து பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறியதாக தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், சந்தாராவின் ராஜினாமா கடிதம் கட்சித் தலைமைக்கு கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ ஹம்சா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.