செப்பாங்கிலுள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து RM4,860 மதிப்புள்ள மானிய விலை சமையல் எண்ணெய் கைப்பற்றப்பட்டது

புத்ராஜெயா, ஜூலை 24 :

கடந்த வெள்ளியன்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் (KPDNHEP) சிலாங்கூர் கிளையினர், கோத்தா வாரிசான், செப்பாங்கில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடத்திய சோதனையில், RM4,860 மதிப்புள்ள 1,944 கிலோகிராம் மானிய விலையிலான சமையல் எண்ணெயைக் கைப்பற்றியதாக KPDNHEP அமலாக்க இயக்குநர் அஸ்மான் ஆடாம் தெரிவித்தார்.

காலை 10 மணிக்கு நடந்த சோதனையில், பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான பல ரசீதுகளும் வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டன என்றார்.

மேலும் “மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெயின் பாக்கெட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து மறைத்து வைத்திருப்பதாக வளாகத்தின் உரிமையாளர் சந்தேகிக்கப்படுகிறார், இது நெறிமுறையற்ற செயலாகும்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புகார்களின் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் கடையில் மற்ற பொருட்களை வாங்கினால் மட்டுமே மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்க அனுமதிக்கப்படுவதாக அஸ்மான் கூறினார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனைக்கு சட்டவிரோத நிபந்தனைகளை விதித்ததற்காக, பிரிவு 19, விநியோக கட்டுப்பாடு சட்டம் (ஏகேபி) 1961 இன் கீழ் வளாக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கில், பிரிவு 22 (1) AKB 1961 இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அக்குற்றம் RM1 மில்லியனுக்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அஸ்மான் கூறினார்.

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானியம் வழங்கப்படும் பொருட்களின் முறைகேடு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 019-2794317 மற்றும் 019-848 8000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது e-aduan@kpdnhep.gov.my போர்டல், e-aduan@kpdnhep.gov.myக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது Ez ADU ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் மூலம், 1-800-886-800 அல்லது அமலாக்க கட்டளை மையத்தை (ECC) 03-8882 6088 இல் தொடர்பு கொள்ளுமாறு அவர் நுகர்வோருக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here