சாலையோர உணவுக் கடையில் இருந்து பணத்தை திருடிக் கொண்டு ஓடிய மூவரை போலீசார் தேடுகின்றனர்

ஜோகூர் பாரு, ஜூலை 25 :

கடந்த வியாழக்கிழமை (ஜூலை 21) சாலையோர உணவுக் கடையில் இருந்து, பணமிருந்த ஒரு கொள்கலனுடன் ஓடுவதை காட்டும் காணொளியிலுள்ள மூன்று பேரை போலீசார் தேடி வருவதாக, ஜோகூர் பாரு வடக்கு போலீஸ் தலைவர், துணை ஆணையர் ரூபியா அப்துல் வாஹிட் கூறினார்.

மாலை 6 மணியளவில் பாதிக்கப்பட்ட 18 வயது சிறுமி, தம்போயில் உள்ள ஜாலான் ஆருங்கில் உள்ள உணவுக் கடையில் தனது தாய்க்கு உதவியாக இருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

“உள்ளூர்காரர் என்று நம்பப்படும் ஒரு நபர், கடையில் இருந்து உணவு வாங்குவது போல் நடித்து, அதற்கு பதிலாக பணம் இருந்த ஒரு கொள்கலனை திருடினார்.

“மற்ற இரண்டு நபர்களுடன் வந்த அவர், போலி பதிவு எண்ணைக் கொண்ததாக நம்பப்படும் கருப்பு நிற பெரோடுவா ஆக்சியாவில் தப்பிச் சென்றார்” என்று அவர் இன்று திங்கள்கிழமை (ஜூலை 25) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் சுமார் RM300 இழந்ததாக ரூபியா தெரிவித்தார்.

பொதுமக்கள் அந்த நபர்களைப் பிடிக்க முயன்றனர் ஆனால் அது பலனளிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here