விடுதலைப் புலிகளுடன் தொடர்பு என DAP பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டதை தற்காத்து பேசிய முஹிடின்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்புடையதாகக் கூறி 2019 ஆம் ஆண்டு 12 நபர்களை காவல் துறையினர் தடுத்து வைக்க அனுமதித்த தனது முடிவை டான்ஸ்ரீ முஹிடின் யாசின் (PN-Pagoh) தற்காத்து பேசினார்.

RSN Rayer (PH-Jelutong) ஆல் கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​காவல்துறை நடத்திய விசாரணையில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக முஹிடின் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டிஏபியின் ஜி.சாமிநாதன் மற்றும் பி.குணசேகரன் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது ஏன் என்று ராயர்  கேட்டார்.

பொறுப்பான அமைச்சராக, நான் விசாரணை அதிகாரியாக இல்லாததால் காவல்துறை மீது  நம்பிக்கை வைக்க வேண்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) பொய் சொன்னார் என்று என்னால் கூற முடியாது என்று அவர் நேற்று கூறினார்.

சொஸ்மாவை ஒழிப்பது குறித்து அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இது காலித் சமாட் (பி.எச்-ஷா ஆலம்) முகைதினை “selective amnesia” என்று குறுக்கிட்டு குற்றம் சாட்டத் தூண்டியது.

அமைச்சரவையில் சொஸ்மாவை பற்றி நாங்கள் விவாதித்தோம். நாங்கள் அயோப் கானை (டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை) அழைத்து வந்து சோஸ்மாவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினோம் என்று அவர் முன்னாள் சிறப்புப் பிரிவு பயங்கரவாத எதிர்ப்பு முதன்மை உதவி இயக்குனரைக் குறிப்பிட்டு கூறினார்.

இதற்கு, முஹிடின் ஆம், நாங்கள் அதை மறுபரிசீலனை செய்ய விரும்பினோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், அப்போது அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here