தாய் மசாஜ் தெரபிஸ்டுகளை விநியோகம் செய்யும் கும்பலின் மூளையாக செயல்பட்ட நபர் குடிநுழைவுத் துறையால் கைது

கோலாலம்பூர், ஜூலை 28 :

ஜோகூர் பாருவைச் சுற்றி ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் நடவடிக்கையில் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்ட 28 நபர்களில் தாய்லாந்தின் மசாஜ் செய்யும் பெண்களை விநியோகிக்கும் கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் அடங்குவார்.

குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டவுட் கூறுகையில், 40 வயதுடைய நபர், புரோத்தோன் சாகா காரில் நான்கு தாய்லாந்து பெண்களுடன் வாகனத்தில் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

“அனைத்து பெண்களும் செல்லுபடியாகும் பாஸ்களை வைத்திருக்கவில்லை, மேலும் அவர்கள் மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு சட்டவிரோதமான பாதையில் திரும்பிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்பட்டது. கும்பலின் மூளையாகச் செயல்பட்டவருடன் சேர்த்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைருல் டிஸைமியின் கூற்றுப்படி, குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தாமான் ஆஸ்டின் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள தாமான் அபாத் ஆகிய இடங்களில் உள்ள மசாஜ் மையங்கள் மற்றும் ஸ்பாக்களில் மேலும் இரண்டு சோதனைகளை மேற்கொண்டனர், அதுவும் சம்பந்தப்பட்ட கும்பலுடன் தொடர்புடையதாக இருக்கும் சந்தேகிக்கப்படுகிறது.

“இந்த இரண்டு வளாகங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக, நாங்கள் 18 பெண்களையும், மசாஜ் செய்பவர்களாக பணிபுரிந்த மூன்று தாய்லாந்து ஆண்களையும், வளாகத்தின் பராமரிப்பாளர்களாக இருந்த இரண்டு உள்ளூர் ஆண்களையும் கைது செய்தோம். இந்த தொடர் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 28 பேரும் 20 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள்,” என்றார்.

சோஷியல் விசிட் பாஸ்களைப் பயன்படுத்தி தாய் மசாஜ் தெரபிஸ்டுகளை வரவழைப்பது இக்கும்பலின் செயல்பாடாகும் என்றும், உளவுத்துறையின் அடிப்படையில் மசாஜ் சேவைகளுக்கு மேலதிகமாக ஒழுக்கக்கேடான செயல்களையும் இக்கும்பல் மேற்கொண்டது என்றும் அவர் கூறினார்.

இக்கும்பல் நிர்வகிக்கும் ஒவ்வொரு மசாஜ்க்கும் செய்வதற்கும் RM1,300 முதல் RM1,500 வரை கட்டணம் வசூலிக்கிறது மற்றும் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் ஒரு மாதம் RM50,000 வரை சம்பாதிக்க முடியும் என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக ஜோகூர் பாருவில் உள்ள செத்தியா டிராபிகா குடிவரவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here