20 லிட்டருக்கு மேல் பெட்ரோல், டீசல் வாங்க சிறப்பு அனுமதி தேவை என்கிறார் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர்

புத்ராஜெயா, ஜூலை 28 –

சிறிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், 20 லிட்டருக்கு மேல் உள்ள பீப்பாய்கள் அல்லது பொருத்தமான கொள்கலன்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பெட்ரோல் நிலையங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க விரும்பினால், அவர்கள் விநியோக சட்டம் 1961 இன் கீழ், சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நான்டா லிங்கி கூறினார்.

அவசரகால வழக்குகள் உட்பட 20 லிட்டருக்கு கீழ் கொள்முதல் செய்வதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை என்றார்.

பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்ய பெட்ரோல் நிலையங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று விநியோக கட்டுப்பாட்டுச் சட்டம் 1961 கூறுகிறது, மேலும் வாகனத்தின் அசல் டேங்கில் நிரப்பப்பட்டதைத் தவிர அனைத்து தரங்களின் டீசல் மற்றும் பெட்ரோலையும் பெட்ரோல் நிலையங்கள் விற்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார். மேலும் அவ்வாறு தேவைக்கு அதிகமாக டீசல் மற்றும் பெட்ரோல் தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தால் (KPDNHEP) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

சிறப்பு அனுமதி மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்கள் தினசரி அங்கீகரிக்கப்பட்ட அளவின்படி, அவற்றை பெறுவதற்கு பீப்பாய்கள் அல்லது பொருத்தமான கொள்கலன்களைப் பயன்படுத்தலாம் என்று நந்தா கூறினார்.

சிறப்பு அனுமதி வழங்கப்பட்டவர்களில் ஃபோர்க்லிஃப்ட் ஓட்டுநர்கள், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளில் ஈடுபடுபவர்கள், உணவுத் தொழில் நடத்துபவர்கள், கிராமப்புறவாசிகள், நீர் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் பகுதி நேர மீனவர்கள் (இ-நெளயன் அட்டை வைத்திருப்பவர்கள் அல்ல) ஆகியோர் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.

சிறப்பு அனுமதிக்கான விண்ணப்பத்தை மைசுப்சிடி சிறப்பு அனுமதி அமைப்பு மூலம் http://permitkhas.kpdnhep.gov.my அல்லது எந்த KPDNHEP அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம், மேலும் ஏழு நாட்களுக்குள் அவர்களுக்கான ஒப்புதல் இலவசமாக வழங்கப்படும் என்றும் நந்தா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here