செப்பாங், ஜூலை 29 :
புதன்கிழமை (ஜூலை 27) செப்பாங் உட்பட மலேசியாவை பல பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையின் போது, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) விமானங்கள் எதுவும் தாமதமாகவில்லை என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் Bhd (MAHB) நிர்வாக இயக்குநர், டத்தோ இஸ்கந்தர் மிசல் மஹ்மூட் தெரிவித்தார்.
KLIA க்கு வரும் மற்றும் அங்கிருந்து வெளியாகும் அனைத்து விமானங்களும் சரியான நேரத்தில் செயல்பட்டன.
விமான நிலைய கூட்டுமுயற்சி முடிவெடுப்பதை (A-CDM) செயல்படுத்துவது தொடர்பாக விமான நிலைய ஆபரேட்டர் மற்றும் ஏழு பங்குதாரர்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU ) கையெழுத்திடும் போது, அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
கடந்த புதன்கிழமை நண்பகல் 12.39 மணி முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு, மலாக்கா மற்றும் பகாங் உட்பட தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.