பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினாவின் தந்தை இன்று காலமானார்

பெங்கராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அசலினாவின் தந்தை டத்தோ ஓத்மான் சைட், தனது 89வது வயதில் இன்று காலை கிளானா ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்த விஷயத்தை உறுதி செய்த அஸலினாவின் தனிச் செயலாளர் தனேஷ் ராஜ் உறுதிப்படுத்தினார். அவர்  வயது மூப்பு காரணமாக இன்று காலை இறந்தார்.

இறந்தவரின் உடல் கிளானா ஜெயாவிலுள்ள அல்-ஹிதாயா மசூதியில்  பிரார்த்தனை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் புக்கிட் கியாரா இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. UMNO தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தனது முகநூல் பதிவில், இன்று காலை அல் ஹிதாயா மசூதியில் இறந்தவரின் உடலை பார்வையிட்டார். இறந்தவருக்கு அல்-ஃபாத்திஹாவை வழங்குவோம், அவர்கள் உண்மையுள்ள மற்றும் பக்தியுள்ளவர்களுடன் வைக்கப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here