ஐந்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மூவர், காவல் நிலையத்தில் சரணடைந்தனர்

ஜெம்போல், ஜூலை 30 :

ஐந்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள், இன்று காலை 11.30 மணியளவில் பண்டார் ஸ்ரீ ஜெம்போல் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

சந்தேக நபர், ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் அதாவது பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மாமா, அவரின் மனைவி மற்றும் மகள் என நம்பப்படுவதாக ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, 21 முதல் 41 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும், குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டனர்.

நாளை காலை, அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக போலீஸ் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

“சந்தேக நபர்களில் சிலர் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கடந்தகால பதிவுகளையும் கொண்டுள்ளனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று, ஒரு குழந்தையின் உடல் முழுவதும் தீக்காயங்கள், காயங்கள், காயத் தழும்புகள் கண்டுபிடித்ததாகவும் கடந்த மே மாதம் முதல் தனது மாமா மற்றும் அத்தையின் துஷ்பிரயோகத்தின் விளைவாக, சந்தேகிக்கப்படும் இந்த காயங்கள் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட குழந்தையின் தாய் ஜோகூரில் பணிபுரிவதால், சந்தேக நபர் தனது குழந்தையை ஒரு மாதத்திற்கு RM300 செலுத்தி கவனித்துக் கொள்ள அனுப்பினார்.

பாதிக்கப்பட்டவர் கோலப் பிலாவில் உள்ள துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் (HTAN) சிகிச்சை பெற்றார், மேலும் வழக்கு ஜெம்போல் மாவட்ட சமூக நலத் துறைக்கு (JKM) பரிந்துரைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட குழந்தையின் மற்றுமொரு அத்தை கவனித்தவுடன், இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்தது . மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் ஜூலை 27 அன்று காவல்துறையில் புகார் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here