கணவனை முகத்தில் குத்தியதாக பெண் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு

கூச்சிங், ஆகஸ்ட் 2 –

கடந்த வாரம். தனது கணவரின் முகத்தில் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் பெண் தொழிலதிபர் ஒருவர் மீது இன்று மாவட்ட நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

Ng Hui Ching, 39, என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 326A உடன் சேர்த்து படிக்கப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

மாவட்ட நிதிமன்ற நீதிபதி Zaiton Anuar முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் எனக் கூறி விசாரணை கோரினார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM800 ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தார், மேலும் இவ் வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குற்றச்சாட்டின்படி, இந்த ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மாலை சுமார் 6.15 மணியளவில், இங்குள்ள தாமான் ஹாங் ஹுவாட், ஜாலான் பத்து கவாவில் உள்ள அவர்களது வீட்டில், கணவன் மனைவிக்கிடையேயான தகராறில் 46 வயது கணவரின் முகத்தில் Ng குத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலின் விளைவாக பாதிக்கப்பட்டவரின் வலது கன்னம் வீக்கம் அடைந்ததாகவும், அதனால் அவருக்கு சிறிது மங்கலான பார்வை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here