கொதிக்கும் கூழில் தவறி விழுந்து பக்தர் பலி ; மதுரையில் சம்பவம்

மதுரை, ஆகஸ்ட் 2 :

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது, கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கோவிலில் கடந்த வெள்ளியன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ் காய்ச்சும் பணி நடைபெற்றது. அப்போது முத்துக்குமார் என்கின்ற முருகனுக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here