கழிவுகளை முறையாக நிர்வகிக்காததற்காக பாசீர் கூடாங்கில் உள்ள இரசாயன தொழிற்சாலைக்கு RM310,000 அபராதம்

பாசீர் கூடாங், ஆகஸ்ட் 3 :

இங்குள்ள பாசீர் கூடாங் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலை, கழிவுகளை முறையாக நிர்வகிக்காததற்காக RM310,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் துறை தனது சமூகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தொழிற்சாலையை ஆய்வு செய்த பிறகு, வளாகத்தின் உரிமையாளருக்கு 155 அபராதங்களை விதித்ததாகத் தெரிவித்துள்ளது.

“சம்பந்தப்பட்ட தொழிற்சாலை வளாகங்கள் திட்டமிடப்பட்ட கழிவுகளை கையாளுதல் மற்றும் மேலாண்மை செய்வதில் தோல்வியடைந்தது கண்டறியப்பட்டது.

“இந்தத் தொழிற்சாலை சுற்றுச்சூழல் தரச் சட்டம், 1974 இன் சுற்றுச்சூழல் தர (திட்டமிடப்பட்ட கழிவு) விதிமுறைகள் 2005 ஐயும் மீறியுள்ளது.

“உற்பத்தி செய்யப்படும் அனைத்து திட்டமிடப்பட்ட கழிவுகளும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வளாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவ்வறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

அறிக்கையின்படி, தொழிற்சாலை செயல்முறையின் கழிவு மாதிரிகள் மேலதிகஸ் அமலாக்க நடவடிக்கைக்காக மலேசிய இரசாயனத் துறைக்கு அனுப்பப்படும் என்றும் அடு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here