கருத்து வேறுபாடு காரணமாக கையை வெட்டிய ஆடவர் கைது

கருத்து வேறுபாடு காரணமாக ஒரு நபர் இன்னொருவரின் இடது கையை கத்தியால் வெட்டிய செயலால் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இரவு 9.17 மணிக்கு தனது தரப்பு அறிக்கையைப் பெற்றதாக செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி 42 வயதான பாதிக்கப்பட்டவர் ஜாலான் ஈப்போவின் பத்து 5 இல் உள்ள ஒரு சலூன் முன் இருந்தபோது, ​​அவருக்குத் தெரிந்த 36 வயது நபருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எம்ஏசிசி) பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக செய்திருந்த புகாரில் சந்தேக நபர் அதிருப்தி அடைந்ததே சம்பவத்திற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

சம்பவ இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​சந்தேக நபர் கத்தியால் பாதிக்கப்பட்டவரின் இடது கையில் குத்தினார் வெட்டினார் என்று  செந்துல் மாவட்ட காவல்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக எங் லாய் கூறினார். மருத்துவ அதிகாரியின் பரிசோதனையில், பாதிக்கப்பட்டவருக்கு மூன்று சென்டிமீட்டர் ஆழமான காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

விசாரணையின் அடிப்படையில், நேற்று இரவு 11.50 மணியளவில், செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையக வளாகத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பான மூன்று பதிவுகள் உள்ளன. இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here