சாலையில் புல் வெட்டிக் கொண்டிருந்த துப்புரவு பணியாளர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

கூலிம், ஆகஸ்ட் 6 :

ஜாலான் 4, தாமான் செலாசிஹ் என்ற இடத்தில் கார் மோதியதில், சாலையில் புல் வெட்டிக் கொண்டிருந்த துப்புரவு நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் இறந்தார்.

இன்று பிற்பகல் 1 மணியளவில், தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் காரணமாக 68 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது வேலை செய்து கொண்டிருந்தவர் புல் வெட்டும் இயந்திரத்தை பிடித்துக்கொண்டு காருக்கு அடியில் சிக்கியிருப்பது பார்ப்பதற்கு மேலும் மனவேதனையை ஏற்படுத்தியது.

கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் ரெட்சுவான் சாலே கூறுகையில், குறித்த சம்பவம் தொடர்பில் நண்பகல் 1.14 மணிக்கு அவரது துறைக்கு அழைப்பு வந்தது.

“விபத்தின் போது பாதிக்கப்பட்டவர் புல் வெட்டும் வேலையைச் செய்து கொண்டிருந்தது விசாரணையின் முடிவுகளில் கண்டறியப்பட்டது.

“இருப்பினும், 77 வயது முதியவர் ஓட்டிச் சென்ற ஒரு வெள்ளை நிற புரோத்தோன் ஈஸ்வரா வகை கார், அப்போது சாலையின் இடது பக்கத்தில் இருந்த பாதிக்கப்பட்டவரைத் தாக்கும் முன் கட்டுப்பாட்டை இழந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் கூறியபடி, காரை ஓட்டி வந்த முதியவர் அருகில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

“கார் ஓட்டுநரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருப்பதும், வாகனத்தின் சாலை வரி இன்னும் காலாவதியாகவில்லை என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

“சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 41 (1) இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக கார் ஓட்டுநர் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here