மாரா வழி வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கப்படும்

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து நிதியுதவி வழங்க  Majlis Amanah Rakyat (மாரா) போதுமான ஒதுக்கீடு உள்ளது என்று டத்தோஸ்ரீ மஹ்ட்ஸிர் காலிட்  கூறினார். நாட்டில் பொருளாதார நிச்சயமற்ற நிலை இருந்தாலும் மாரா தனது நிதியுதவி திட்டத்தைத் தொடரும் என்று ஊரக வளர்ச்சி அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் தொடர்ந்து (மாரா ஸ்பான்சர் செய்யப்பட்ட) மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும். நாங்கள் ஆண்டுதோறும் கல்விக்கான ஒதுக்கீட்டைப் பெறுகிறோம். எனவே கவலைப்படத் தேவையில்லை என்று அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 6)  Bekwoh Keluarga Malaysia Rakyat தும்பாட் திட்டம் மற்றும் Felcra Bhd zakat விநியோகத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். Felcra Bhd தலைவர் டத்தோ அகமட் ஜஸ்லான் யாகூப் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here