காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

காசா, ஆகஸ்ட் 7 :

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 குழந்தைகள் உட்பட 24 ஆக உயர்ந்துள்ளது என்று பிராந்தியத்தின் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

மேலும் 204 குடியிருப்பாளர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

ஆனால் இஸ்ரேல் தரப்பு இதனை மறுத்துள்ளது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ராக்கெட் ஏவுகணை தாக்குதலில் தான் குழந்தைகள் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இஸ்ரேல் கூறியது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலின்போது இஸ்லாமிய ஜிஹாத்தின் முக்கிய தளபதியான காலித் மன்சூர், சனிக்கிழமை ரஃபாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அதற்கு ஒரு நாள் முன்பு, அதே சண்டைக் குழுவின் முக்கிய தளபதி தைசிர் அல்-ஜபரியும் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here