தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் வழங்கிய பெண் கைது

ஜோகூர் பாரு வட்டாரத்தில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொய்யான புகாரை அளித்த பெண் ஒருவரின் செயல், இன்று மதியம் கைது செய்யப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெற்கு ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ரவூப் செலமத் கூறுகையில் 23 வயது பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

நேற்று  இரவு போலீஸ் புகாரினை பெற்ற பின்னர், சம்பவம் நடந்த இடம் மற்றும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் நபரை விசாரித்து, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இன்று காவல்துறையால் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

21 வயதான ஆண், தான் அந்த  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், மாறாக அவர்கள் விருப்பத்துடன் நெருங்கிய உறவை வைத்திருந்ததாக தெரிவித்தார்.

விசாரணைக்கு பின் அந்த பெண் இறுதியாக காவல்துறையின் புகார் தவறானது என்று ஒப்புக்கொண்டார். மேலும் ஆடவர் மீண்டும் உடலுறவு கொள்ள விரும்பினார். ஆனால் அவள் விரும்பவில்லை. அதனால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி போலீஸ் புகாரை பதிவு செய்ய முடிவு செய்ததாக கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பலாத்காரம் நடந்ததற்கான எந்த கூறும் இல்லை என்று அவரது தரப்பு மதிப்பிட்டுள்ளது. மேலும் வற்புறுத்தலோ அல்லது விருப்பமில்லாத சம்பவமோ கண்டறியப்படவில்லை.

போலீசாருக்கு தவறான தகவல்களை வழங்கியமைக்காக குற்றவியல் சட்டத்தின் 182வது பிரிவின் கீழ் மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here