போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டியை நிறுத்திய காணொளி தொடர்பில், போக்குவரத்து போலீஸ்காரரிடம் விசாரணை

ஈப்போ, ஆகஸ்ட் 7 :

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வாகன ஓட்டி ஒருவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் போலீஸ்காரரிடம் மீது, உள்ளக விசாரணை நடத்தி வருவதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

இங்குள்ள ஜாலான் கோல கங்சாரில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு அருகே. நேற்று காலை 7.28 மணியளவில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய பணியாளர்களை தமது துறை அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான “காணொளியை பதிவு செய்த வாகன ஓட்டி, ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கப் பிரிவின் தலைவரை 018-5701739 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலதிக விசாரணைகளுக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார். .

போலீஸ் படையில் நேர்மையின் அளவை மேலும் வலுப்படுத்துவதற்காக போலீஸ் உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பான எந்தவொரு பொதுப் புகார்கள் குறித்து, தமது திணைக்களம் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக யாஹாயா கூறினார்.

7 நிமிடங்கள் மற்றும் 11 வினாடிகள் நீடித்த அந்த காணொளியில், போக்குவரத்துக் போலீஸ்காரர் ஒருவர், போக்குவரத்து விதிமீறல் செய்ததாகக் கூறி கார் ஓட்டுநரை நிறுத்தும் டாஷ்போர்டு கேமராக் காட்சிகளைக் காட்டியது, ஆனால் கார் ஓட்டுநர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், போக்குவரத்து காவல்துறை அதிகாரியின் செயலில் தான் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here