காணாமல் போனதாக மூன்று நாட்களாக தேடப்பட்டுவந்த முதியவர், அவர் ஓட்டிச்சென்ற காருடன் பள்ளத்தில் விழுந்து இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்

மெர்சிங், ஆகஸ்ட் 9 :

காணாமல் போனதாக மூன்று நாட்களாக தேடப்பட்டுவந்த முதியவர், இன்று இங்குள்ள ஜாலான் கோத்தா திங்கி-மெர்சிங் சாலையின் 25ஆவது கிலோமீட்டரில், அவர் ஓட்டிச் சென்ற காருடன் பள்ளத்தில் விழுந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மெர்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிரில் எட்வர்ட் நுயிங் கூறுகையில், WC9129E என்ற பதிவு எண் கொண்ட நீல நிற பெரோடுவா மைவி கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, அவரது தரப்பு பொதுமக்களிடமிருந்து காலை 9.10 மணிக்கு தகவல் கிடைத்தது.

முதியவரான ஜஹாரி ஜகாரியா, 62, திரெங்கானுவில் உள்ள கெமாமனில் உள்ள தனது வீட்டிலிருந்து இங்கு அருகிலுள்ள பாசீர் கூடாங்கில் உள்ள தனது பணியிடத்திற்கு சென்றார், ஒரு நாள் சென்றும் அவர் விடு திரும்பாததால், அவரது மகன் தந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி, பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.

“விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியுட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை இன்னும் தொடர்கிறது என்றும், விபத்துகளைத் தவிர்க்க இருண்ட சாலைகள், மழைக்காலம் மற்றும் திருப்புமுனைகளைக் கடக்கும்போது வாகனம் ஓட்டுவதில் அதிக கவனத்துடன் இருக்குமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here