கூலாயிலுள்ள ஒரு வீட்டின் மீது வாகனம் மோதியதால், அங்குள்ள குடியிருப்பாளர்களால் ஓட்டுநர் தாக்கப்பட்டார்

கூலாய், ஆகஸ்ட் 10:

இன்று அதிகாலை இங்குள்ள தாமான் மக்மூரில் உள்ள ஒரு வீட்டின் வேலியை உடைத்துக்கொண்டு, வீட்டின் மீது வாகனம் மோதியதில், கோபமடைந்த அக் குடியிருப்பாளர்களால் தாக்கப்பட்டதில் 30 வயதுடைய வாகன ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார்.

Toyota Hilux நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதாக அதிகாலை 2.11 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்தது என்று கூலாய் காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் தோக் பெங் இயோவ் கூறினார்.

அதனைத் தொடர்ந்து “ஒரு போலீஸ் ரோந்து கார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​வாகனம் வீட்டில் மோதியதில் கோபமடைந்த அங்குள்ள குடியிருப்பாளர்களால் தாக்கப்பட்டதாக நம்பப்பட்ட சந்தேக நபரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதை அவர்கள் கண்டனர்.

“60 வயதுடைய ஓட்டுநர் ஓட்டிவந்த வாகனம், வீட்டின் வளாகத்தில் மோதி, பின்னர் வேலியின் ஒரு பகுதியை அழித்ததுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் சேதப்படுத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மூச்சுப் பரிசோதனையில், ” அவர் மதுபானம் பவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு இரண்டு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக கூலாய் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

போலீசார் வருவதற்கு முன்னர் சந்தேக நபரை அடித்ததற்கு காரணமானவர்களையும் இனங்காண தாம் விசாரணை செய்து வருவதாக தோக் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42ன் கீழ், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது. இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM5,000 முதல் RM15,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் குற்றவியல் சட்டத்தின் 323 வது பிரிவின் கீழ், தானாக முன்வந்து ஒருவரைக் காயப்படுத்தியதற்கான விசாரணை அறிக்கையையும் போலீசார் திறந்துள்ளார், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here