GoKL இன் இலவச பேருந்துகளைப் பயன்படுத்துபவர்களில் 45.2 விழுக்காட்டினர் வெளிநாட்டினர்..!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 :

GoKL-ன் இலவச பேருந்து சேவை 45.2 விழுக்காடு வெளிநாட்டினரால் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய பிரதேசங்களின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்தார்.

எனவே, பொதுச் சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினரிடம் கட்டணம் வசூலிக்க கோலாலம்பூர் மாநகரசபை (DBKL) முன்மொழிவதற்கான வாய்ப்பைத் தாம் நிராகரிக்கவில்லை என்றும் கூறினார்.

“அவர்கள் இந்த சேவையை இலவசமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த சேவையை பயன்படுத்தும் வெளிநாட்டினரின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் RM1 மட்டுமே வசூலித்தால், ஒவ்வொரு மாதமும் RM9.2 மில்லியன் வசூலிக்க முடியும்,” என்று அவர் இன்று தேசிய சட்டமன்றத்தில் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

GoKL இன் இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினரிடம் அரசாங்கம் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதா என்பதை அறிய விரும்பிய செனட்டர் டத்தோ முகமட் ஹிசாமுடின் யஹாயாவின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மேலும் உள்ளூர் மக்கள் தலைநகரில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாததற்கான காரணம் குறித்த செனட்டர் டத்தோ டாக்டர் டொமினிக் லா ஹோ சாயின் கூடுதல் கேள்விக்கு பதிலளித்த ஜலாலுதீன், ஆரம்ப மற்றும் சேரும் இடங்களின் வழித்தடங்களுக்கு இடையேயான இணைப்பு இன்னும் திருப்திகரமாக இல்லாததே முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றார்.

மேலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விட, தங்கள் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவதால் தமக்கு குறைத்த நேரமே எடுப்பதாக சாலைப் பயனாளர்கள் கூறுகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here