நாளை இரவு 8 மணிக்குள் 397 பகுதிகளுக்குரிய நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 :

ஆற்று நீர் மாசுபட்டதன் காரணாமாக, இன்று நீர் விநியோகம் தடைப்பட்ட பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட்டை உட்படுத்திய 397 பகுதிகளுக்கு, நாளை இரவு 8 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, லாங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் (LRA) நீர் சுத்திகரிப்பு செயல்முறை மீண்டும் செயல்படத் தொடங்கியது என்று ஆயிர் சிலாங்கூர் செண்டிரியான் பெர்ஹார்ட் (Air Selangor) இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

எனவே தண்ணீர் விநியோக முறை உறுதிப்படுத்தப்பட்டவுடன், சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் நுகர்வோருக்கு கட்டம் கட்டங்களாக விநியோகிக்கப்படும் என்றும் நுகர்வோரின் வளாகத்தின் இருப்பிடம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் நீர் வழங்கல் மறுசீரமைப்பு காலம் வேறுபடும், ”என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here