ஆண்களின் இஹ்ராம் உடையில் உம்ரா செய்த பெண்ணுக்கு கடுமையான நடவடிக்கை காத்திருக்கிறது: இத்ரிஸ்

ஆண்கள் அணியும் இஹ்ராம் உடையை அணிந்து உம்ரா செய்த பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோ இட்ரிஸ் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் ஒரு முகநூல் பதிவில், அந்த நபர் மலேசியாவுக்குத் திரும்பியதும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.

இஹ்ராம் கட்டிய நிலையில் ஆண் யாத்ரீகர்கள் அணிந்திருந்த ஆடையில் பெண் ஒருவர் உம்ரா செய்துள்ளார் என்ற வைரலான செய்தி குறித்து நான் கவலையடைகிறேன், இது சமய விஷயம்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் சம்பந்தப்பட்ட நபர் பயணம் செய்வதற்கு ஏற்பாடு  செய்த  சுற்றுலா முகவரை சரிபார்த்து, விஷயம் உண்மை என கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளதாகவும் இட்ரிஸ் தெரிவித்தார்.

இன்று ட்விட்டரில் பகிரப்பட்ட 17 வினாடிகள் கொண்ட வீடியோ, புனித பூமியில் ஆண் இஹ்ராம் உடையணிந்த மலேசியர் என்று கூறப்படும் ஒரு பெண், நெட்டிசன்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here