ஜோகூரில் குற்ற விகிதம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 6% குறைந்துள்ளது என்கிறார் மந்திரி பெசார்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 13 :

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஜோகூரில் குற்ற விகிதம் கிட்டத்தட்ட 6% குறைந்துள்ளது என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹாபிஸ் காசி தெரிவித்தார்.

‘2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ஜோகூரில் குற்ற விகிதம் 5.51% குறைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் மாநிலத்தில் குற்ற விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்காக காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்’ என்று தனது முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான ஜோகூர் (Safe Johor)” என்ற பிரச்சாரத்தை இன்று (ஆகஸ்ட் 13) தொடக்கி வைத்த அவர், மாநிலத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் அதிகரிக்கவும், 2030க்குள் முன்னேறிய மாநிலமாக இருக்க வேண்டும் என்ற தனது இலக்கை அடையும் ஜோகூர் அரசின் முயற்சியை ஆதரிப்பதற்காகவும் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த, மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் வேன்கள் மற்றும் மொபைல் காவல் நிலையங்கள் ஆகியவை ஜோகூரை பாதுகாப்பாக வைத்திருப்பதில் போலீசாருக்கு உதவுவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here