பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் பிக்கப் டிரக் மீது மோதி, தீப்பிடித்து எரிந்ததில் அவர் உயிரிழந்தார்.

லிம்பாங், ஆகஸ்ட் 15 :

ஜாலான் நங்கா மெனாமிட் என்ற இடத்தில், இன்று காலை அவர் ஓட்டிச் சென்ற கார் பிக்கப் டிரக் மீது மோதி, தீப்பிடித்து எரிந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சரவாக் தீயணைப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை 9 மணியளவில் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.

“உடனே இடத்திற்கு வந்த லிம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழுவினர் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

தீயை அணைக்கும் பணி முடிந்ததும், புரோத்தோன் சாகா காரை ஓட்டிச் சென்றவர் காரினுள்ளே உடல் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டனர்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் பிக்கப் டிரக்கின் (ஹிலக்ஸ்) ஓட்டுநரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், ஆனால் இந்த விபத்தில் அவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் அங்கிருந்த ஒரு குடிமகனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here