மதுபோதையில் வாகனம் ஓட்டிய தொழிலாளிக்கு 14 நாட்கள் சிறை, 10,000 வெள்ளி அபராதம் -சிரம்பான் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

சிரம்பான், ஆகஸ்ட் 16 :

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காக 58 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 நாட்கள் சிறை தண்டனையும், RM10,000 அபராதமும் விதித்து சிரம்பான் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தான் ஹான் சியூவின் ஓட்டுநர் உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்டான் சியாபினாஸ் ரோஸ்லின் உத்தரவிட்டார்.

வழங்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாத பட்சத்தில் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி இரவு 11.05 மணியளவில், ஜாலான் லிங்காகரான் பேர்மையில் இக்குற்றம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வாகனம் ஓட்டும்போது அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவு 100 மில்லி இரத்தத்தில் 50 மில்லிகிராம் ஆக இருந்தபோது, அவரது இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் உள்ளடக்கம் 100 மில்லி இரத்தத்திற்கு 151 மில்லிகிராம் ஆக அளவிடப்பட்டது.

அவர் மீது சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 45A(1)ன் கீழ் தான் ஹான் சியூக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM10,000 முதல் RM30,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் குற்றவாளியின் ஓட்டுநர் உரிமத்தையும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here