தேசியக் கொடிகளை வெட்டிய ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 :

இங்குள்ள மலேசிய சுற்றுலா மையத்திற்கு (MaTiC) அருகே சாலையோரம் நிறுவப்பட்டிருந்த மலேசிய தேசியக் கொடிகளை வெட்டுவதைக் காட்டும் ஒரு நபரின் காணொளி, நேற்றிரவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அவரை தேடுகின்றனர்.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறையின் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், “சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. தேசியக் கொடிகளை வெட்டிய நபரைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன,” என்று அவர் நேற்றிரவு கூறினார்.

TikTok இல் பதிவேற்றப்பட்ட 38 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சிகளில், சிவப்பு சட்டை மற்றும் தொப்பி அணிந்த நபர் கத்தரிக்கோல் வைத்திருப்பதையும் சில தேசியக் கொடிகளை அவர் வெட்டி சேதப்படுத்துவதையும் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here