தலைமை நீதிபதியை மிரட்டியதாக ஆடவர் ஒருவர் போலீசாரால் கைது

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் SRC இன்டர்நேஷனல் ஊழல் மேல்முறையீட்டில் பெடரல் கோர்ட் பெஞ்ச் தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்டை மிரட்டியதாக 30 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் நேற்று இரவு 11.15 மணியளவில் சிலாங்கூரில் உள்ள பூச்சோங்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். கைபேசி மற்றும் சிம் கார்டை போலீசார் கைப்பற்றினர். “Apiez Bond” என்ற முகநூல் கணக்கின் கீழ் ஒரு பதிவின் மூலம் அச்சுறுத்தல்கள் வெளியிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here